மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை… ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது’... ரஜினி வசனம் மேற்கோள்!

 
ரஜினி

 

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மாணவிகளுக்கு உரையாற்றினார். எம்.சி.சி பள்ளியின் பழைய மாணவராக இக்கல்லூரிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். பெண்களுக்கு அறிவே உண்மையான அழகு என்றும், படிப்பே மிக அழகான அணிகலன் எனக் கூறியுள்ளார்.  

ஸ்டாலின் திமுக

வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை என்றும், கடின உழைப்பால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா பட வசனமான “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது” என்ற வசனத்தை மேற்கோள் காட்டி மாணவிகளை ஊக்குவித்தார். பெண்கள் உயர்கல்வியில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு பெரும் பயன் அளித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறினார். நகர்ப்புறங்களை விட கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளதாகவும், பெண்கள் பட்டப்படிப்பைத் தாண்டி ஆராய்ச்சி படிப்புகள் வரை தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!