வைரமுத்து இல்லத்தில் ரஜினி சந்திப்பு… ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!
நடிகர் ரஜினிகாந்த் நேற்று கவிஞர் வைரமுத்து இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பின் அடையாளமாக அமைந்தது. இதனை வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார்
— வைரமுத்து (@Vairamuthu) January 26, 2026
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்
‘பாசமுள்ள மனிதனப்பா - நான்
மீசவச்ச குழந்தையப்பா’
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்
வியப்புக்குரிய மனிதர்தான்
அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல்… pic.twitter.com/LSkHVQpEXt
ரஜினியை “பாசமுள்ள மனிதன்” என புகழ்ந்த வைரமுத்து, அரை நூற்றாண்டாக அரசியல் மற்றும் சமூக சூழல்களை கடந்து தன்னை நிலைநிறுத்தியது சாமர்த்தியத்தால் என குறிப்பிட்டார். இருவரும் நூறு நிமிடங்கள் உரையாடியதாகவும், உணவு, உடல்நலம் முதல் தமிழக மற்றும் தேசிய அரசியல் வரை பேச்சு நீண்டதாகவும் தெரிவித்தார்.

ரஜினியின் தெளிவும் உண்மைத்தன்மையும் தன்னை கவர்ந்ததாக வைரமுத்து கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தனது கலைப்பயணத் திட்டங்களை ரஜினி விரிவாக பகிர்ந்ததாகவும், 2027 ரசிகர்களுக்குக் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
