ரஜினி காந்த் நெகிழ்ச்சி.. 45 சவரன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசு!
சென்னை தியாகராய நகர் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா என்பவர், சாலையோரம் கிடந்த பையை கண்டெடுத்தார். அந்த பையில் தங்க நகைகள் இருப்பதை அறிந்த அவர், உடனடியாக தனது மேலதிகாரிகளின் உதவியுடன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் துறையினர் பையை சோதனை செய்ததில், ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர், இதே நகைகளை தொலைத்ததாக ஏற்கனவே புகார் அளித்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நகைகள் உரிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சாலையில் கிடந்த விலைமதிப்புள்ள நகைகளை நேர்மையாக காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவின் செயலை பலரும் பாராட்டினர். தமிழக முதல்வர் அவரை நேரில் அழைத்து சால்வை அணிவித்து ரூ.1 லட்சம் பரிசளித்தார். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் பத்மாவை நேரில் சந்தித்து தங்கச் சங்கிலி வழங்கி அவரது நேர்மையை பாராட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
