ராஜ்நாத் சிங் மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம்!

 
மருதமலை


கோவை மாவட்டத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது மகளும் மருமகனும் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருந்தனர்.

மருதமலை

இதனைத் தொடர்ந்து தனது மனைவியைப் பார்ப்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வந்திருந்தார்.கோவை வந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்து விட்டு நேற்று மாலை 6:15 மணிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்திருந்தார்.

மருதமலை

அங்கு வந்த அவர் முதலில் ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும் பின்னர் பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார். தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து 6.45 மணிக்கு  கிளம்பினார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது