மாநிலங்களவைத் தேர்தல்.. 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றம்... போட்டியின்றி தேர்வு உறுதி!
ராஜ்ய சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் ஆறு பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிவா, ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், L. K. சுதீஷ், M.தம்பிதுரை மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் செல்லுபடியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதரவு இல்லாத காரணத்தால் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் மற்ற வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் இந்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி அமைப்பின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
