ராம நவமி.. தமிழகம் முழுவதும் ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு!

 
ராம நவமி ஆஞ்சநேயர் ராம நவமி ஆஞ்சநேயர்

இன்றும், நாளையும் பங்குனி மாத நவமி திதி வருவதால், ராம நவமி இன்றா அல்லது நாளையா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. நாளை தான் புனர் பூசம் நட்சத்திரமும் வருவதால் நாளை மார்ச் 27ம் தேதி வெள்ளிக்கிழமை தான் ராம நவமி விழா. என்றாலும் இன்றே பலரும் ராம நவமியை வரவேற்கத் தயாராகி விட்டனர். தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதலே ஆஞ்சநேயர் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 

சித்திரை மாத நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார் என்பது புராணம். ராம நவமியை முன்னிட்டு ஆஞ்சநேயர், விஷ்ணு, ராமர் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்து பக்தியுடன் தரிசித்து செல்கின்றனர். 

ராம நவமி ஆஞ்சநேயர்

ராம நவமி தினத்தில் ராம நாம மந்திரத்தை உச்சரித்தால் அனைத்து கடவுள்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம். மறக்காமல் 101 முறையோ, 1001 முறையா ராம நாமத்தை ஆலயங்களில் உச்சரித்து, துளசி சாற்றி வழிபடுங்கள். உங்கள் குறைகளை ராமர் தீர்த்து வைப்பார். 

ராம நவமி ஆஞ்சநேயர்

தமிழகம் முழுவதும் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சீதாராம கல்யாண திருவிழாவும் நடைபெற உள்ளது.

அயோத்தியில் ராம நவமி விழா களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், அம்மாநில அரசு, இன்றும், நாளையும் என 2 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?