ராம் ரஹீமுக்கு 15வது முறையாக பரோல்; மீண்டும் சர்ச்சை!

 
sarchai

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு 40 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஹரியாணா அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அவர் 15வது முறையாக பரோலில் வெளியே வருகிறார்.

2017 ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்ட ராம் ரஹீம், இதுவரை மொத்தம் 405 நாள்கள் பரோலில் வெளியே இருந்துள்ளார். இன்றையுடன் 2026ஆம் ஆண்டுக்கான பரோல் கணக்கும் தொடங்கியதாக கூறப்படுகிறது. 40 நாள்கள் முடிந்து பிப்ரவரியில் அவர் மீண்டும் சிறைக்குத் திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பரோல் விதிமுறைகள் இருந்தும், காணொலி மூலம் ஆதரவாளர்களை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. தேர்தல் காலங்களில் தொடர்ந்து பரோல் வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வழக்குகளில் ஏற்பட்ட வன்முறையில் 40 பேர் உயிரிழந்ததும் மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!