ராம் சரண் – உபாசனாவுக்கு இரட்டைக் குழந்தைகள்!

 
ramsaran

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர் ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார். ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பதிவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ramsaran

ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2023 ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் கடந்த அக்டோபரில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக தம்பதியினர் தெரிவித்திருந்தனர். தற்போது அந்த மகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது.

ramsaran

ராம் சரண் ஆர்ஆர்ஆர், மகதீரா, ரங்கஸ்தலம் போன்ற படங்கள் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர். உபாசனா அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் அறக்கட்டளை துணைத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!