ராம் ஜென்மபூமி இயக்கத் தூணான ராம் விலாஸ் வேதாந்தி மறைவு… அயோத்தியில் ஜல சமாதி!

 
 Ram Vilas Vedanti
 

 

ராம் ஜென்மபூமி இயக்கத்தின் முக்கிய நபரும், இரண்டு முறை பாஜக மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம் விலாஸ் வேதாந்தி (67) மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் திங்கள்கிழமை காலமானார். உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு அயோத்தி துறவி சமூகத்திலும், பாஜக வட்டாரங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி நியாஸின் நிர்வாகத் தலைவராக இருந்த வேதாந்தி, 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்திலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக இருந்து, 2020ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். 1949ல் ராம் லல்லா சிலைகள் நிறுவப்பட்ட விவகாரத்திலும் அவரது பெயர் குறிப்பிடப்பட்டது.

வேதாந்தியின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை காலை அயோத்தியில் சரயு நதியில் ஜல சமாதி முறையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். “அவரது வாழ்க்கை மதம், சமூகம், தேச சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!