ராம நவமியில் மாஸ் ... ஒரே நேரத்தில் 4,900 பேர் மகா ஆரத்தி எடுத்து கின்னஸ் சாதனை !

 
ராம நவமி ராம நவமி

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் இன்று நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. உலக அமைதியை வேண்டி நடைபெற்ற பிரம்மாண்ட மகா ஆரத்தி நிகழ்ச்சியில், ஒரே இடத்தில் 4,900 பேர் ஒன்றாகத் திரண்டு இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓரிடத்தில் கூடி ஆரத்தி எடுப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம் பிடித்துள்ளது.

இந்தச் சாதனை குறித்துப் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "இன்று நாக்பூர் மண் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2,500 பேர் ஒன்றாகத் திரண்டு ஆரத்தி எடுத்ததே சாதனையாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று எம்.எல்.ஏ ஆஷிஷ் தேஷ்முக்கின் சீரிய முயற்சியால் 4,900 பேர் பங்கேற்று அந்தச் சாதனையை முறியடித்துள்ளனர். ராம நவமி நன்னாளில் படைக்கப்பட்ட இந்த கின்னஸ் சாதனை ஒட்டுமொத்த மராட்டிய மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது," எனத் துள்ளிக் குதிக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ராம நவமியை முன்னிட்டுத் திட்டமிடப்பட்ட இந்த மெகா சாதனைக்காக கடந்த சில நாட்களாகவே தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கின்னஸ் சாதனை அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த மகா ஆரத்தி நடைபெற்ற நிலையில், துல்லியமாகக் கணக்கிடப்பட்டு 4,900 பேர் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டது. ஆன்மீகத்தோடு சாதனையும் இணைந்த இந்த நிகழ்வு நாக்பூர்வாசிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தி முழக்கங்களுடன் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டபோது அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!