தமிழகத்தில் நாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது... தலைமை காஜி அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக நோன்பு இருந்து வருகிறது. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.
பிறையின் அடிப்படையில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் நாள் முடிவு செய்யப்படுகிறது. இதனால் ரமலான் பண்டிகை உலகின் ஒவ்வொரு இடங்களிலும் ஒருநாள் வரை மாறுபடுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ரமலான் பிறை நேற்று தென்படாததால் ரமலான் நோன்பு நாளை மார்ச் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!