ரமலான், தெலுங்கு வருட பிறப்பு... தடுமாறும் அரசு ஊழியர்கள்... ஏப்ரல் 2ல் தான் சம்பளம்!

 
.ஸ்டாலின்

ரமலான், தெலுங்கு வருடப்பிறப்பு, தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணம் என்று ஏற்கெனவே பொதுமக்கள் செலவுகளை எதிர்நோக்கி இருக்கையில் இந்த மாதத்திற்கான சம்பளம் ஏப்ரல் 2ம் தேதி தன் என்று தமிழகத்தில் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் 2 ம் தேதி  வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொதுவாக மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வழங்கப்படுவது வழக்கம். இதே நடைமுறை தான் ஓய்வூதியதாரர்களுக்கும்.  

அரசு
பொதுவாக, ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிதியாண்டு மாற்றம் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிறு மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ம் தேதி  வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும். இதன் காரணமாக ஏப்ரல் 1ம் தேதி வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்ரல் 2ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அரசு
இந்த ஊதியம் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி  உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது  ஆனால் தமிழக அரசு இது குறித்து கூடுதல் அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், ஊதிய வழங்கல் தொடர்பான இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web