புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்!! முதல்வர் இரங்கல்!!

 
ரமாதேவி

இந்தியா முழுவதும் பல்வேறு ஜமீன்கள், பாளையங்கள்,  சமஸ்தானங்கள் ,  மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த வகையில் தமிழகம் புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொண்டைமான் மன்னர்கள்  ஆட்சி செய்து வந்தனர். இந்தியா  சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டன. அப்போது சில சமஸ்தானங்கள் தனக்கேற்ற சலுகைகளை பெற்றுக் கொண்டே ராஜ்ஜியத்தை அரசாங்கத்திற்கு விட்டுக் கொடுத்தன. ஆனால்  எந்த சலுகையையும் பெறாமல் கருவூலத்தில் உள்ள பொன், பொருள் உட்பட அத்தனையும் அப்படியே ஒப்படைத்த சிறப்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உண்டு.

ரமாதேவி
அந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதாவும் தற்போதைய கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் தாயாருமான ராணி ரமாதேவி உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார். அவருக்கு வயது 85. ராணியின் உடல் புதுக்கோட்டையில் உள்ள அவரது  பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ரமாதேவி
முதல்வர் ஸ்டாலினும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி தொண்டைமானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தம்முடைய இரங்கல் செய்தியில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமான் அவர்களின் மனைவியார் ராணி திருமதி ரமாதேவி அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற தகவல் அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web