நீடிக்கும் மோதல்... பா.ம.க. பொதுச்செயலாளர் நியமனம் ... ராமதாஸ் அடுத்த அறிவிப்பு..!

 
ராமதாஸ்

பா.ம.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க டாக்டர் ராமதாஸ் கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார்.

பாமகவில் மீண்டும் சலசலப்பு... மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தார் அன்புமணி ராமதாஸ்!

இதுவரை 60 மாவட்ட செயலாளர்கள், 39 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை  டாக்டர் ராமதாஸ்  வெளியிட்டுள்ளார். பா.ம.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கிவிட்டு , முரளி சங்கர்  நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது