கண்ணீர் விட்டு கதறி அழுத ராமதாஸ் … “அன்புமணியை சரியாக வளர்க்கல” !
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் திடீரென கண்ணீர் விட்டு அழுதது கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்புமணி ராமதாஸ் தரப்பின் செயல்பாடுகள் தனக்கு மனவேதனை அளிப்பதாக கூறிய அவர், “அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை” என வருத்தத்துடன் பேசினார். “சில்லறை பசங்களை வைத்து தினமும் என்னை அவமானப்படுத்துகிறார்கள்” என்று கூறிய ராமதாஸ், இது தன்னை கடுமையாக காயப்படுத்துவதாக தெரிவித்தார்.

சென்னையில் தந்தையை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மகன் சம்பவத்தை ஒப்பிட்டு, “அதைவிட மோசமான அவமதிப்பு இது” என்று கூறிய ராமதாஸ், அன்புமணி தரப்பு தன்னை தவறாக சித்தரிப்பதாக குற்றம்சாட்டினார். கனவில் தாயார் வந்ததாக கூறிய அவர், “அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்?” என உருக்கமாக கேள்வி எழுப்பினார். தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுக்குழு மண்டபம் தரவிடாமல் தடுக்க சதி நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ், “கூட்டணிக்கான நேரம் இன்னும் வரவில்லை. தொண்டர்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்” என்றார். “95 சதவீத பாட்டாளி மக்கள் என் பின்னால் உள்ளனர்” என்று கூறிய அவர், பதவிக்காக அரசியல் செய்யவில்லை எனவும் வலியுறுத்தினார். ராமதாஸின் கண்ணீர் மல்கிய பேச்சு பாமகவின் உள் பிளவை வெளிப்படையாக காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
