பாமக–அதிமுக கூட்டணி செல்லாது... ராமதாஸ் எதிர்ப்பு!

 
பாமக நிறுவனர் ராமதாஸ்
 

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக உட்பட்ட நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி நேரில் சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

இதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியை மருத்துவர் அய்யா மட்டுமே வழிநடத்தி வருவதாக, 17.12.2025 முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டார் என்று தெரிவித்தார். அதனால் அன்புமணியுடன் அல்லது வேறு எவருடனும் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் சட்டப்படி செல்லாது எனவும், நடந்தால் அது சட்டவிரோதமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ராமதாஸ், அன்புமணி

ராமதாஸ் கூறியது, “மருத்துவர் அய்யா மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் கூட்டணிகளை பேசியும் ஒப்பந்தம் செய்யும் அதிகாரம் உள்ளவர். அன்புமணி அல்லது மற்றவர் செய்தால் அது கட்சியின் விதிகளையும், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறுவதாகும்” என வலியுறுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!