ராமஜெயம் கொலை வழக்கு ரவுடிக்கு மீண்டும் சம்மன் சாதிக்குமா எஸ்ஐடி!! இல்லை சரக்குமா விசாரணை ?

 
ராமஜெயம்


திமுக அமைச்சர் கே.என்.நேருவின் அன்புச்சகோதரரும் எம்.டி என எல்லோராலும் அழைக்கப்பட்ட ராமஜெயம், 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருச்சி மாநகர போலீசார் 12 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால் அவரது மனைவி லதாவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று சிபிஐக்கு மாற்றியது அதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) ஏற்படுத்தி தற்பொழுது எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது.

சம்மன்
இந்த வழக்கில், பிரபல ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், திருச்சி சாமி ரவி, மாரிமுத்து, சத்யராஜ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன், கடலுார் சிறையில் இருக்கும் செந்தில்குமார் ஆகிய 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களில், குடவாசலைச் சேர்ந்த தென்கோவன் தவிர மற்ற எல்லாரும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடந்தது. இந்த சோதனை முடிவி லும் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

ராமஜெயம்
இதையடுத்து இந்த ரவுடிகளிடம் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் தினேஷ் குமாரை திருச்சிக்கு கடந்த ஆறாம் தேதி வரவழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுபோல மாமாங்கமாய் முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பதால் காவல்துறையினரின் மீது இருக்கும் மரியாதை தேய ஆரம்பித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web