ராமநாதபுரம் : ‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ பெயர் பலகையை அகற்றிய அதிகாரிகள்!

 
நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சாலை ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை ஷேர் செய்திருந்தார். மேலும் அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை... பெரிய தாமரைக்குடி சின்ன தாமரை கொடி ஆகிய கிராமங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தார் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

பல வருடங்கள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்த மக்கள் பிரச்சனையை ஒரே நாளில் ரயில்வே அமைச்சகத்துடன் பேசி செய்து கொடுத்தார் நிதி அமைச்சர். கிராம மக்கள் தங்கள் ஊருக்குச் செல்லும் பிரதான சாலைக்கு நிதியமைச்சரின் பெயரை சூட்டி உள்ளார்கள். கிராம சபைக் கூட்டத்தில் மேடம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

நிர்மலா சீதாராமன் பெயரில் சாலைக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் இராமநாதபுரம்: லாந்தை கிராமத்தில் நேற்று பாஜக மாவட்ட தலைவரால், உரிய முன் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட ‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ என்ற பலகை அதிகாரிகளால் அகற்றம் செய்யப்பட்டது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web