இன்று 2024 இல்ல.... ராமர் ஆண்டு .... சர்ச்சையாகும் பாஜகவின் போஸ்டர்... !

 
ramar year

உத்தரப் பிரதேசத்தில்  அயோத்தியில் கட்டப்பட்டு வரும்  ராமர் கோயில்  ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் தற்போது   நிறைவடையும் தருவாயில் உள்ளது.  இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்  அயோத்தி நகர் முழுவதும்  விழாக்கோலம் பூணத் தயாராகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள்,  கொண்டாட்டங்கள் என ஜரூராக பணிகள் நடைபெற்று வருகின்றன.  

 

அயோத்தி
இன்று ஜனவரி 1, 2024 புத்தாண்டு உலகம் முழுவதும் பிறந்துள்ள நிலையில்   ஆங்கில புத்தாண்டு களைகட்டியுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பாஜகவில்  மதுரை மாநகரில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ’’தேசத்தின் அடையாளம் அயோத்தி ராமர் கோயில், கி.பி 2024, அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துக்கள்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி விமான நிலையம் மோடி

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மதுரை மாவட்டப் பொதுச் செயலாளர் குமார் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கி.பி 2024 கிடையாது என்பதை  வகையில்  அடிக்கப்பட்டு இருப்பதால் சமூக வலைதளங்களில் இந்த போஸ்டருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web