பக்தர்கள் நெகிழ்ச்சி... கோவில் திருப்பணியில் ராமாயண ஓலைச்சுவடி கண்டெடுப்பு!

 
 ராமாயண ஓலைச்சுவடி

திருப்பத்துார் மாவட்டம் கண்டிலி ஒன்றியம், கொரட்டி  கிராமத்தில் அமைந்துள்ள திருக்கோவில்  காளகத்தீஸ்வரர், ஞான பிரசூனாம்பிகா இந்தக் கோவில் திருப்பணியின் போது, ராஜகோபுரத்தில் ஐந்து ராமாயண சுவடிகளை திருப்பத்துார் சரக ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி கண்டெடுத்தார். அவர், ஹிந்து சமய அறநிலையத்துறை செயலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து, சுவடி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைபாண்டியன் “ திருப்பத்தூர் மாவட்டம் பிரசூனாம்பிகாக சமேத காளகத்தீஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து சுவடி கட்டுகளை, கடந்த, 21ம் தேதி ஆய்வு செய்தோம். அவற்றில், 2,075 ஏடுகள் உள்ளன. அவற்றில் உள்ள குறிப்பு மற்றும் எழுத்து வடிவின் அடிப்படையில், 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, வழிச்சுவடி மரபைச் சேர்ந்தது.  

 ராமாயண ஓலைச்சுவடி

அதாவது, கிருஷ்ண கவுண்டரும், பள்ளிக்கொடுத்தான் என்கிற கோவிந்தசாமி கவுண்டரும் சேர்ந்து எழுதிய சுவடிகளை பார்த்து, புதுச்சேரி சுப்புராய தம்பிரான் மகன் ஆறுமுகம் உபாத்தியாயர் படி எடுத்துள்ளார். அதன்படி, மூலச்சுவடிகள், 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். இந்த சுவடிகளில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, வசன நடையில் மிக விரிவாக, 'ஸ்ரீ ராமாயணக் கதை' என்ற பெயரில் எழுதப்பட்டு உள்ளது. இதில், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆகியவை மட்டும் உள்ளன. இவற்றில் பல ஏடுகள் காணப்படவில்லை.

 ராமாயண ஓலைச்சுவடி

இவை, பல ஆண்டுகளாக சுற்றப்பட்ட நிலையிலேயே இருந்ததால், பூஞ்சை படிந்து உள்ளன. அவற்றை சுத்தப்படுத்தி, வேதியியல் பராமரிப்பு செய்து வருகிறோம். இது, சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் கலக்காத வசன நடையில், பொது மக்கள் படித்து புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளதால்   இவற்றை பிரதியெடுத்து  அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்தால் பதிப்பிக்கலாம்.   மேலும், சிவன் கோவிலில், ராமாயணம் ஓலைச்சுவடி கிடைத்திருப்பதற்கான ஆய்வையும் செய்ய வேண்டி உள்ளது” எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?