சுழன்றடிப்போகும் சூறாவளி காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 13-ம் தேதி பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலத்தீவை ஒட்டிய கடல் பகுதிகளிலும் கடும் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.

ராமேசுவரம் பாக் ஜலசந்தி கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (டிசம்பர் 10) மீன்பிடி டோக்கன் வழங்கப்படாது என மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

மீன்பிடி தடையால் ராமேசுவரம் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளுமாறு மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
