தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்... மீன்களை பறித்து கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

தமிழகம் முழுவதும் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டிருந்தது. மீன்பிடி தடைக்காலம் ஜூன் 15 நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று இருந்த நிலையில் பலத்த சூறைக் காற்றின் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காற்றின் வேகம் குறைந்த காரணத்தால் நேற்றைய தினம் காலை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல நேற்று முன்தினம் நள்ளிரவே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் வாங்காமல் கடலுக்கு சென்றனர். நீண்ட இடைவெளிக்கு பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள், நிறைய மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடலுக்குச் சென்றிருந்தனர்.
ஆனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி மீன்களை அள்ளிக் கொண்டும் விரட்டியடித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் படகு ஒன்றுக்கு 2 லட்சம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!