ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.1.16 கோடி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் மூலம் ரூ.1.16 கோடி பக்தர்கள் செலுத்திய காணிக்கை வருவாய் கிடைத்துள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் செல்லத்துரை தலைமை வகித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி, அம்மன் மற்றும் இதர சுவாமிகள் சன்னதியிலும், உப கோயில்களின் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ1,16,57,019 ரொக்கம், 32 கிராம் தங்கம், 4 கிலோ 950 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!