ராமேஸ்வரம் கோயிலில் காலி பணியிடங்கள்... எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!

 
இராமேஸ்வரம்

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்த சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், “ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில், தமிழ் புலவர் 1, பிளம்பர் 1, காவலர் 18, கருணை இல்லம் பெண் காப்பாளர் 1, துப்புரவுப் பணியாளர் 27, தூர்வை (Sweeper) 26. கால்நடை பராமரிப்பு 2 ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ராமேஸ்வரம்

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், ராமநாதசுவாமி கோயில், ராமேசுவரம் – 623 526, ராமநாதபுரம் மாவட்டம். பதிவு தபாலில் விண்ணப்பிக்க கடைசி நாள் 12.03.2025 ஆகும்.

ராமேஸ்வரம் அக்னி அமாவாசை

கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்பத்தை www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web