மாநாட்டில் ரேம்ப் வாக்... தொண்டர்களை சந்திக்க ஆவலுடன் தயாராகும் முதல்வர் ஸ்டாலின்!
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12வது மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

மாநாட்டிற்கு வரும் லட்சக்கணக்கான தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் 500 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்டமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை வழியாக ஸ்டாலின் நடந்து சென்று தொண்டர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் முதலமைச்சரை மிக அருகில் இருந்து காணும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாநாட்டிற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
