ரன்வீர் சிங்குக்கு கொலை மிரட்டல்… பாலிவுட்டில் பரபரப்பு!

 
ranveer singh
 

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் அருகே சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டை நோக்கி 5 ரவுண்டுகள் சுடப்பட்டதில் கட்டிட சுவர்களில் 3 ஓட்டைகள் ஏற்பட்டன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் புனேவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே, தற்போது நடிகர் ரன்வீர் சிங்குக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட குரல் பதிவில், கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ரன்வீர் சிங் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

டெல்லி போலீஸ்

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர் வீட்டின் முன்பு 6 ஆயுத பாதுகாவலர்களை நியமித்துள்ளனர். ஆனால் உரிய அனுமதி இல்லாமல் ஆயுதம் ஏந்தி சுற்றுவதால் குடியிருப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மிரட்டல் விடுத்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!