குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்.. பெங்களூருவில் பள்ளி நிர்வாகி வெறித்தனம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பி.டி.எம் லே-அவுட் பகுதியில் வசிக்கும் 43 வயது பெண் ஒருவர், தனது கணவரால் விற்கப்பட்ட பள்ளியைத் திரும்பப் பெற முயன்றபோது இந்தச் சதிச் செயலில் சிக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இணைந்து ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியை நடத்தி வந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் துன்புறுத்தல் காரணமாகப் பெண் விவாகரத்து கோரித் தனியாக வசித்து வருகிறார். கடன் சுமை காரணமாகப் பெண்ணின் கணவர், அந்தப் பள்ளியை முகமது ஹனிப் என்பவரிடம் விற்றுள்ளார். தனது உழைப்பில் உருவான பள்ளியைத் திரும்பப் பெற விரும்பிய அந்தப் பெண், ஹனிப்பை அணுகி ரூ.16 லட்சத்தை முன்பணமாக வழங்கியுள்ளார்.

பள்ளியைத் திரும்பத் தர வேண்டுமென்றால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு மதம் மாற வேண்டும் என்றும் ஹனிப் அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பள்ளி சம்பந்தமான வேலைக்காகத் தனது அலுவலகத்திற்கு வந்த பெண்ணிற்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார் ஹனிப். மயக்கமடைந்த பெண்ணை, தனியாக இருந்ததைப் பயன்படுத்திப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அப்பெண்ணைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து பேடராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது ஹனிப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
