ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறல்.. ஆபாச பேச்சு.. ரயில்வே காவலர் கைது !!

தேஜஸ் ரயிலில் சுவிட்சர்லாந்து பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரயில்வே போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தேஜஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண், தனது காதலருடன் பயணம் செய்துள்ளார்.
ரயில் கான்பூரில் சென்றுக்கொண்டிருந்தபோது அந்த வெளிநாட்டு பெண்ணிடம் ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டார். அதோடு நிறுத்தாமல் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் ரயில்வே போலீஸ்காரர் தாக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் பெரும் விரக்தி அடைந்த காதலர்கள் இவரும், இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறையில் இளம்பெண் புகார் அளித்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சுவிட்சர்லாந்து பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் ஜிதேந்திரசிங் என்ற ரயில்வே போலீஸ்காரர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேஜஸ் ரயிலில் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க