பைக் டாக்ஸி சேவை மீண்டும் ஆரம்பம் ... தடையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் !

 
ரேபிடோ

 

கர்நாடகாவில் அம்மாநில அரசு விதித்திருந்த பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதித்த தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம், இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பதிவு செய்து முறையான உரிமம் பெற்ற வாகனங்களாக சேவையை தொடர அனுமதித்துள்ளது. இதன் மூலம் Ola, Uber, Rapido போன்ற ஆப்-அடிப்படையிலான நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையை துவங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரேபிடோ

இந்த தீர்ப்பால் ஆயிரக்கணக்கான பைக் ஓட்டுநர்கள் தங்களது தொழிலை தொடரக் கூடிய நிம்மதியை பெற்றுள்ளனர். ஆனால், பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் சமூகத்தில் பரவலாக உள்ளது. பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பைக் டாக்ஸிகள் உதவியாக இருந்தாலும், சமீபகாலங்களில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட புகார்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ரேபிடோ வீடு வீடாக உணவு டெலிவரி... விரைவில் தொடக்கம்!  

இந்நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதி தொழிலுக்கு உயிர் ஊட்டியுள்ளதுடன், பயணிகளின் பாதுகாப்பு குறித்து புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தேவை என்பதைக் குறிப்பிடுகின்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!