ரேபிடோ வீடு வீடாக உணவு டெலிவரி... விரைவில் தொடக்கம்!

 
ரேபிடோ வீடு வீடாக உணவு டெலிவரி... விரைவில் தொடக்கம்!  


பைக் டாக்சி நிறுவனங்களில் முண்ணனியில் இருந்து வருவது ரேபிடோ பைக் டேக்ஸி சேவை . இந்நிறுவனம் தற்போது  உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதற்காக OWNLY என்ற செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரேபிடோ 
அடுத்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் முதலில்  இந்த சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணம் மற்றும் வெளிப்படை தன்மையுடன் இந்த சேவை செயல்படுத்தப்படும் என ரேபிடோ நிறுவனம் உறுதி அளித்துள்ளது.  

ரேபிடோ
100 ரூபாய்க்கு குறைவான உணவை வாங்கினால் டெலிவரி கட்டணமாக வாடிக்கையாளர்களிடமிருந்து 20 ரூபாய், ஹோட்டல்களில் இருந்து 10 ரூபாய் வசூல் செய்யப்படும். நூறு ரூபாய்க்கு மேல் உணவு வாங்கினால் 25 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும் என  இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது சந்தையில் உள்ள மற்ற டெலிவரி சேவைகளை விட மிக குறைவான கட்டணமாக கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது