ஆண்டில் ஒரே நாள்… ஜனவரி 2ல் மரகத நடராஜரை நேரில் காணும் அதிசய தருணம்!

 
நடராஜர்
 

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயிலில், மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒளி, ஒலி அதிர்வுகளால் சேதம் ஏற்படாமல் இருக்க, ஆண்டு முழுவதும் இந்த சிலை சந்தனக் காப்பால் மூடப்பட்டு இரும்புக் கதவுகளுக்கு பின்னால் வைக்கப்படுகிறது. மார்கழி மாத ஆருத்ரா தரிசன நாளில் மட்டும் அந்த சந்தனக் காப்பு களையப்படும்.

உத்தரகோசமங்கை கோயில் ஆனி திருமஞ்சனம்

ஆருத்ரா தரிசன தினத்தில் காலை 8.30 மணிக்கு நடராஜர் சந்நிதி திறக்கப்பட்டு, மரகத நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பால், பழம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மகாபிஷேகம் நடக்கும். அந்த ஒரு நாள் முழுவதும் சந்தனக் காப்பில்லாமல் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது.

நடராஜர்

மறுநாள் காலையிலேயே மீண்டும் சந்தனக் காப்பு செய்து நடை அடைக்கப்படும். இந்த ஒரே நாள் தரிசனத்திற்காக தமிழகம் மட்டுமின்றி பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகோசமங்கைக்கு திரள்கிறார்கள். இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசனம் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!