பழைய ஆடியோவை நீக்குங்க... வைரலாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா எச்சரிக்கை பதிவு!

 
ராஷ்மிகா ராஷ்மிகா

இந்தியாவின் முன்னணி நடிகை   ராஷ்மிகா மந்தனா.இவர்  சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.  இந்நிலையில் தன்னைச் சுற்றி பரவும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து அவர் சமூக வலைதளத்தில் ஆவேசமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்  ராஷ்மிகா மந்தனா  8 ஆண்டுகளாக பல விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் பொறுமையாக இருந்ததாகவும், ஆனால் சமீபத்தில் நடந்த சம்பவம் அந்த எல்லையை மீறிவிட்டதாகவும்  கூறியுள்ளார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தனிப்பட்ட உரையாடல் பதிவு செய்யப்பட்டு அதில் சில பகுதிகள் நீக்கப்பட்டு  தற்போது  அவை அனைத்தும் தவறான அர்த்தத்தில் பரப்பப்படுவதாகவும்  அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த ஆடியோ வெளியானதால் தனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது ஒருவரின் தனியுரிமையை மீறும் செயல் எனவும்  அவர் தனது பதிவில் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தன்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் நீக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ரக்‌ஷித் ஷெட்டி உடன் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அது ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்போது நடந்த உரையாடல் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில்  பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!