கல்யாணத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா ஜோடி சமூக வலைதளங்களில் இருந்து விலகல்?!
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் அதிகம் பேசும் ஜோடிகளில் ஒருவராக கருதப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் உள்ள கோட்டையில் மிகவும் தனிப்பட்ட முறையில் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திருமணத்தை ஆவணப்படமாக தயாரித்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்காக பெரிய தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களிடையே இந்த திருமணத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக திருமண தேதி குறித்து பரவிய தகவல்களை நடிகை மறுத்திருந்தாலும், தற்போது பிப்ரவரி 26 தேதி உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒரு மாதம் சமூக வலைத்தளங்கள் மற்றும் சினிமா பணிகளில் இருந்து விலகி தனிப்பட்ட வாழ்க்கையில் நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
