ஓடிடிக்கு வந்த ரஷ்மிகாவின் 'தம்மா'... மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

 
ராஷ்மிகா

ரசிகர்களின் நேஷனல் கிரஷ் ரஷ்மிகா மந்தனா நடிப்பில், தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பிய 'தம்மா' திரைப்படம் இப்போது உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே வந்துவிட்டது! ஆமாம் வாசகர்களே, தீபாவளி ரேஸில் கலந்துகொண்ட இந்தப் படம் இப்போது ஓடிடியில் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ராஷ்மிகா

'தம்மா'வில் என்ன ஸ்பெஷல்?

நகைச்சுவையும், சஸ்பென்ஸ் த்ரில்லரும் கலந்த ஒரு பக்கா எண்டர்டெய்னர் தான் இந்தப் படம். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாக நடிக்க, ரஷ்மிகா மந்தனா தனது துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

ஏற்கனவே ரசிகர்களை மிரட்டிய 'ஸ்ட்ரீ 2', 'முஞ்ஜியா' போன்ற ஹாரர்-காமெடி படங்கள் உருவான அதே 'மேட்டாக் ஹாரர் யுனிவர்ஸில்' தான் இந்தப் படமும் உருவாகியுள்ளது. அதனால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. படத்தில் ரஷ்மிகா மட்டுமல்ல... பிரகாஷ் ராஜ், பரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக் என இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிப்பு ராட்சசர்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

ராஷ்மிகா

தினேஷ் விஜயன் மற்றும் அமர் கௌசிக் தயாரிப்பில், ஆதித்யா சர்போட்கர் இந்தப் படத்தை செம சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார். கடந்த அக்டோபர் 21ம் தேதி தீபாவளி விருந்தாக தியேட்டர்களில் வெளியானபோது, இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும் ரஷ்மிகாவின் நடிப்புக்காகவும், அந்த த்ரில்லர் காட்சிகளுக்காகவும் படம் பேசப்பட்டது.

எங்கே பார்க்கலாம்?

தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் அல்லது மீண்டும் பார்க்க விரும்புபவர்களுக்காக, அமேசான் பிரைம் (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் இந்தப் படம் இப்போது ஸ்டீமிங் ஆகிக் கொண்டிருக்கிறது. வார இறுதியில் ஒரு த்ரில்லர் அனுபவத்தை விரும்பினால், தாராளமாக 'தம்மா'வை ஒரு கை பார்க்கலாம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!