மழைநீரில் வெறுங்காலோடு நடக்காதீங்க... வேகமெடுக்கும் எலிக்காய்ச்சல் பரவல்!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சாலைகளில் தேங்கியுள்ள நீரிலிருந்து எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) மற்றும் மிலியாய்டோசிஸ் போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மழைநீரில் வெறும் கால்களில் நடப்பதை தவிர்க்கவும், அத்தகைய நீர் நிலைகளில் தேவையற்ற தொடர்பை ஏற்கெனவே நிறுத்தவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

சுழல் வடிவமான ‘லெப்டோஸ்பைரா’ என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் எலிக்காய்ச்சல், விலங்குகளின் சிறுநீர் மற்றும் குறிப்பாக எலிகளின் கழிவுகளின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயாகும். இது சிறுநீரகத்தையும் நுரையீரலையும் தாக்கும் திறன் கொண்டது. மழைநீரில் கலந்துள்ள இந்த கழிவுகளில் கால்வைத்தாலோ, சிறிய காயங்கள் வழியாகவோ நோய் உடலுக்கு நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலத்தில் மண்ணில் வாழும் ‘பர்கோல்டெரியா ஸ்யூடோமேய்’ எனும் நுண்ணுயிரின் மூலம் பரவும் மிலியாய்டோசிஸ் நோயும் அதிகரிக்கும் அபாயத்தில் உள்ளது. உடலில் காயங்கள் உள்ளவர்கள் சேறும் நீரும் கலந்த மாசடைந்த நீரில் நடக்கும் போது, தரமற்ற குடிநீரை அருந்தும்போது அல்லது அந்த நுண்ணுயிரி பரவிய காற்றை சுவாசிக்கும் போதும் இந்த தொற்று ஏற்படலாம். இரண்டாம் வாரத்திலிருந்து காய்ச்சல், நடுக்கம், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் இந்த நோய், சிகிச்சை கிடைக்காவிட்டால் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், எலும்பு, மூளை போன்ற பல உறுப்புகளை தாக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.சர்க்கரை நோயாளிகள், நோயெதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், கல்லீரல்–சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், புற்றுநோய் மற்றும் ஹெச்ஐவி நோயாளிகள் போன்றோருக்கு இந்த தொற்று ஏற்படும் அபாயம் மிக அதிகம் என்பதால், மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை அவசியம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
