ஏப்ரல் 12ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன்கார்டுகள் குறை தீர்க்கும் முகாம்!

 
ரேஷன்கார்டு குறைதீர்க்கும் முகாம்

தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன்கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஒவ்வொரு மாதமும் 2ம் சனிக்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஏப்ரல் மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகாம் 2025 ஏப்ரல் 12ம் தேதி சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 

ரேஷன்கார்டு

காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில், பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.இந்த முகாம்களில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் போன்ற சேவைகள் செய்து கொள்ளலாம். 

ரேஷன்கார்டு

ரேஷன்கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் சந்தைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார்கள் இருந்தால், அவற்றை இம்முகாமில் தெரிவித்து உடனடி தீர்வு பெற பொதுமக்கள் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web