இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்.. மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்கள் இந்த பொருட்களை பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் குறை தீர்ப்பு முகாம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் என அனைத்து கோரிக்கைகளும் மனுக்களாக பெறப்பட்டு விரைவில் அதற்கான தீர்வு காணப்படும்.
அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெறுகிறது. உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!