இன்று முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை!

 
ரேஷன்

இன்று ஏப்ரல் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அத்துடன்  அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. 

ரேஷன் கடை

இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. 

ரேஷன் சர்க்கரை

இதனைத் தொடர்ந்து நாளை ஏப்ரல் 11 ம் தேதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால் நாளையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. அதே போன்று ஏப்ரல் 12 ம் தேதி 2வது சனிக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை. இதன் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 தினங்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வருவதால் அதற்கேற்ப பொதுமக்கள் திட்டமிட்டு பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web