ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு!

 
ரேஷன் ஊழியர் ரேஷன் ஊழியர்

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர்களுக்கான முதல் ஆண்டுத் தொகுப்பூதியம் ரூ.6,250 இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500 இலிருந்து ரூ.6,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரேஷன் சர்க்கரை

ஒரு ஆண்டு பணிக்காலம் முடிந்த பிறகு விற்பனையாளர்களுக்கான சம்பள அளவு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டுநர்களுக்கான சம்பள அளவு ரூ.9,000 முதல் ரூ.35,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குடன் வருடத்திற்கு 3 சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன்

இந்த சம்பள உயர்வு மாநிலம் முழுவதும் உள்ள 22,804 விற்பனையாளர்கள் மற்றும் 3,216 கட்டுநர்கள் உட்பட மொத்தம் 26,020 ரேஷன் கடை பணியாளர்களுக்கு பயனளிக்கும். அகவிலைப்படி, பண்டிகை முன்பணம் மற்றும் பல்வேறு நலச் சலுகைகளும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!