ரவீணாவுக்கு எலிமினேட் கார்டு கொடுத்த பிக்பாஸ்... வைரலாகும் புரோமோ...!

 
ரவீணா

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி விறுவிறுப்புக்கும்,  பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பைனலை நோக்கி நகரும் இந்த வேளையில் சர்ச்சைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.  போட்டியாளர்கள் ஒவ்வொருவரும்  இறுதி மேடையை அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  பிக்பாஸ்  முயலை சுற்றி செங்கலை வைக்கச் சொன்னார் .  இன்றோ முயல் மேக்ஸ் என்ற புது டாஸ்க்கை கொடுத்துள்ளார்.  ஹவுஸ்மேட்ஸ் கார்டில் குறிப்பிட்டபடி  க்ரிட்டில் முன்னேறி முயலை அடைவது தான் டாஸ்க். இது குறித்து  விஜே அர்ச்சனாவின்  ப்ரொமோ வீடியோ  வைரலாகி வருகிறது.  

இந்நிலையில் ரவீணாவுக்கோ எலிமினேடட் என கார்டு வந்துவிட்டது. இதனைப் பார்த்ததும்  ரவீணா ஒரு நிமிஷம் ஆப் ஆகிவிட்டார்.   என்னை யார் அவுட் பண்ணீங்கனு ரவீணா கேட்க முதல் ஆளாக மாயாவும், அவரின் தோழி பூர்ணிமாவும் கையை தூக்கியது தான் ஹைலைட்.   விஷ்ணு இதனை பார்த்த விஷ்ணுவோ, சரியான கார்டா இருக்கே எனக் கலாய்த்தார்.  உடனே ரவீணா நான் விஷ்ணுவை எலிமினேட் செய்கிறேன் எனக் கூறினார்  ரவீணா.  இதில் கிரியேட்டிவ் டீம் பாலில் இருந்து முயலுக்கு தாவிவிட்டது.  டிக்கெட் டூ ஃபினாலேவுக்கு இப்படியா மொக்கையா டாஸ்க் கொடுப்பது பிக் பாஸ்? நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.  பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்


ரவீணா
 

.இதில் ஒரு பகுதியாவது டாஸ்க்கில் கவனம் செலுத்தினால் நல்லது.  மணி, விஷ்ணு, தினேஷ், ரவீணா சொல்லி வைத்து விளையாடியது சரியில்லை என்கின்றனர் பிக்பாஸ் வெறியர்கள்.   தினேஷ் எப்பொழுது பார்த்தாலும் விசித்ராவை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதனை நிறுத்தினால் பரவாயில்லை.   இதற்கிடையே பிக் பாஸ் வீட்டில் எச்சில் துப்பிய பூர்ணிமாவின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.  எப்படி இந்த பூர்ணிமா நாமினேஷனுக்கு வராமல் போனார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்த வாரம் மட்டும் 2 பேர் வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால்  பார்வையாளர்கள் பார்த்து பார்த்து ஓட்டு போட்டுக் கொண்டுள்ளனர்.  அதே போல் இந்த வாரம் நிக்சனை வெளியேற்றிவிட வேண்டும் என்பதிலும்  குறியாக இருந்து வருகின்றனர்.  
 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web