கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் பொருந்தாது!

 
கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள்  பொருந்தாது!
 


 

ரிசர்வ் வங்கி நகைக்கடன்களில் புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு கடும் அவதிப்படுவர் என கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்  வங்கிகளுக்கு சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக்கடன் பெறுவதற்கு புதிதாக 9 விதிகளை அறிவித்திருந்தது. அதன்படி  அடமானம் வைக்கப்படும் நகை மதிப்பில் 75 விழுக்காடு மட்டுமே கடன் வழங்கப்படும். 

கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள்  பொருந்தாது!

வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  வட்டியை மட்டுமே செலுத்தி மறு அடகு வைக்கலாம் என்று ஒரு நிலை தான் இதுவரை நடைமுறையில் இருந்தது. தற்போது  அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து  தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில்  கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அவர் விடுத்த அறிக்கையில்  ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் பாதிக்கும், ஆனால் இது கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது. 

கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள்  பொருந்தாது!

விலைமதிப்பில் 75 % கொடுக்கலாம் எனக் கூறுகின்றனர். அதை தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்களை இது வெகுவாக பாதிக்கும். இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின் நடுத்தர மக்களையும் விவசாயிகளையும் பாதிக்கின்றது என அறிந்து நிதி அமைச்சருக்கு இந்த புதிய விதிகளை  திரும்ப பெற வேண்டும் என கடிதம் எழுதி  வலியுறுத்தியுள்லார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது