வரலாறு படைத்த ஆர்சிபி… அதிரடி வெற்றியால் மீண்டும் WPL சாம்பியன்!

 
ஆர்சிபி
 

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

204 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. போட்டி கடைசி ஓவர்களுக்கு சென்றபோதும் அழுத்தம் இன்றி ஆடிய அந்த அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் WPL வரலாற்றில் அதிக ரன் இலக்கை துரத்திய சாதனையை பெங்களூரு பதிவு செய்தது.

இந்த வெற்றியால் பெங்களூரு அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும் ஐபிஎல் மற்றும் WPL கோப்பைகளை ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் அணியாகவும் புதிய சாதனை படைத்தது. அணியின் வெற்றிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்து, கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் அணியினரை பாராட்டினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!