ஈரானுக்கு உதவத் தயார்... ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் ஜூன் 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் இந்த போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்யாவில் அதிபர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நியாயமற்றது . மேலும் புதின், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களுக்கு உதவ ரஷ்யா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக ஈரானுக்கு ரஷ்யா உதவ வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஈரானின் தேவையைப் பொருத்து ரஷ்யா உதவிக்கரம் நீட்டும் எனவும், இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!