நிகழ்நேர தரவுகள் பொதுப்பயன்பாட்டில் இருந்து நீக்கம்... வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!

 
வானிலை ஆய்வு மையம்
 இந்திய வானிலை மையம் சார்பில் வானிலை நிலவரம் குறித்து மக்களுக்கு அறிவித்து வந்தது. இந்நிலையில்  நிகழ்நேர தரவுகளை பொதுபயன்பாட்டிலிருந்து வானிலை ஆய்வு மையம் நீக்கியிருப்பது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து RTI ல் விளக்கம் கேட்டதற்கு நிகழ்நேர தரவுகள்  இனி வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என இந்திய வானிலை மையம் அதிர்ச்சி பதிலை அளித்துள்ளது.

பனி, மழை

இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் இவைகளை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாரும் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழை

இனி ஒருநாளுக்கான தகவலே பொதுமக்களுக்கு கிடைக்கும். குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு மழை, வெயில் என்ற தகவலை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் மட்டுமே அறியலாம். இதன் தாக்கம் இயற்கை பேரிடர்கள் காலத்தில் மிக தீவிரமாக இருக்க கூடும் என்பது தான் வருத்தமான செய்தியாக இருந்து வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது