விண்வெளி வர்த்தகத்தில் சாதனை... அமெரிக்காவின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ !

 
அமெரிக்க செயற்கைக்கோள் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அமெரிக்காவின் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான, மிகப்பெரிய தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. (AST) என்ற நிறுவனம், செல்போன் சேவைக்கான பிரம்மாண்டமான 'புளூபேர்ட்-6' என்ற தகவல் தொடர்புச் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதன் எடை சுமார் 6.5 டன் ஆகும்.

இந்தச் செயற்கைக்கோளை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ

இந்த எடை மிகுந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த, இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டான எல்.வி.எம்-3 (LVM-3) பயன்படுத்தப்பட உள்ளது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி ராக்கெட்டை ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதற்காக, 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, தற்போது ராக்கெட்டுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராக்கெட் ஏவுதளத்திற்கு நகர்த்தப்படுவதற்கு முன், சில முக்கியச் சோதனைகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரோ

இந்த 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள், சுமார் 2,400 சதுர அடி பரப்பளவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது, முந்தைய 'புளூபேர்ட் 1 முதல் 5' வரையிலான செயற்கைக்கோள்களை விட 3.5 மடங்கு பெரியது. மேலும், அதன் தகவல் அனுப்பும் திறனை விட இது 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது, குறைந்த-பூமி சுற்றுப்பாதையில் (Low-Earth Orbit) செலுத்தப்படும் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய தனியார் மற்றும் செல்போன்-இணக்கமான ஆண்டெனாவாகச் செயல்படும். அடுத்த தலைமுறைக்கானதாகக் கருதப்படும் இந்தச் செயற்கைக்கோள், வணிக மற்றும் அரசு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!