ISIS தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல்... 4 பேர் அதிரடி கைது!

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை ஜூன் 18ம் தேதி நேற்று புதன்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கில், தமிழகத்தில் சென்னை, கோவை, மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் 4 பேரை கைது செய்தது. இந்த வழக்கு, 2022 அக்டோபர் 23 ம் தேதி கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக இருந்தது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அகமது அலி (போடநூர், திருமரை நகர்), ஜவஹர் சதிக் (உக்கடம் அருகே புல்லுக்காடு), ராஜா அப்துல்லா என்ற மேக் ராஜா, மற்றும் ஷேக் தாவூத் ஆகியோர் . இவர்கள், கோவை அரபிக் கல்லூரி (மெட்ராஸ் அரபிக் கல்லூரி) நிறுவனர் ஜமீல் பாஷாவால் தீவிரவாத சித்தாந்தமான சலஃபி-ஜிஹாதி கொள்கைகளை ஏற்று, இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்டதாக NIA தெரிவித்துள்ளது.
அரபி மொழி வகுப்புகள் என்ற பெயரில், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற தளங்கள் மூலம் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில், ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இஷ்ரத், சையத் அப்துர் ரஹ்மான், மற்றும் முகமது ஹுசைன் ஆகியோர் முன்னரே கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
NIA-யின் விசாரணையில், இவர்கள் கிலாஃபத் சித்தாந்தத்தை பரப்பி, இந்தியாவின் ஜனநாயக அரசை அகற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கு ஆயுத போராட்டம் மற்றும் ஜிஹாத் மூலம் தூண்டியதாக தெரியவந்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், 2022-ல் ஜமேஷா முபீன் என்ற தற்கொலை குண்டுதாரியால் கோவையில் நடத்தப்பட்ட வாகன குண்டு வெடிப்புக்கு வழிவகுத்ததாக NIA கூறுகிறது. NIA, இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!