தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

 
ரெட்
 

தமிழகத்தில் மழை மேலும் தீவிரமாவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மயிலாடுதுறை, அரியலுர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அழுத்தம் வலுப்பெற்று வருவதால், தென் மாவட்டங்கள் முழுவதும் மழை செறிவாக பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்

அதே நேரத்தில் கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேக கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், மழை மேலும் பல மணி நேரம் தொடரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரெட்

நாளையும் மழை தீவிரம் அதிகரிக்கும் நிலையில், நவம்பர் 29-ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும். மேலும் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையும், வேலூர், திருப்பத்தூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!