நாளை ரெட் அலர்ட்... பள்ளிகளுக்கு விடுமுறை.. !

 
நாளை ரெட் அலர்ட்...  பள்ளிகளுக்கு விடுமுறை.. !  

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.  குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான  ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட  கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார்.  இதனால் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை

வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல்  காற்றுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும்.

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை
இன்று கோவை,  திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளையும், மறுநாளும்  நீலகிரி மாவட்டத்துக்கு 20 செ.மீ. மழைக்கு மேல் பதிவாகக்கூடிய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 14, 15ல் கோவை மலைப்பகுதிகள், நெல்லை மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது