டிட்வா புயல் ... சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்!

 
ரெட்
 

தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய வட தமிழகம்–புதுவை கடலோரப் பகுதிகளில் உருவான ‘டிட்வா’ புயல் நேற்று (30.11.2025) மாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது. அது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்றைய (01.12.2025) காலை 8.30 மணிக்கு சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 50 கி.மீ, புதுவைக்கு 130 கி.மீ, கடலூருக்கு 150 கி.மீ, நெல்லூருக்கு 200 கி.மீ தொலைவில் இருந்தது. அப்போது தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து தமிழக கடற்கரை வரை தூரம் 40 கி.மீ மட்டுமே என கணிக்கப்பட்டது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் வட திசையில் நகர்ந்து மீண்டும் வலுக்குறைந்த மண்டலமாக தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு கடல் பகுதிகளில் நிலைநிறுத்தக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரெட்

சென்னையில் நேற்று இரவு முதலே மழை இடைவெளியின்றி கொட்டித் தீர்க்கும் நிலையில், முன்பு வழங்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது ரெட் அலர்ட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து சாலைகள் குளமாக மாறியுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதும், இன்றிரவு வரை மிக கனமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீசும் பலத்த காற்றும், மழையும் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

பொதுமக்களே உஷார்...  இந்த மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்... !

ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை சாத்தியம் உள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகக் கடற்கரை முழுவதும் எச்சரிக்கை தொடரும் நிலையில், மக்கள் வெளியே செல்ல தவிர்க்க மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!