சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

 
ரெட்

டித்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால், நகரம் முழுவதும் இடைவிடாத கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் சாலைகள் சிற்றோடை போல் மாறி, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ச்சியான மழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்ட நிலையில், மழைவெள்ளம் உருவான பகுதிகளில் மக்கள் அச்சம் அதிகரித்து வருகிறது.

ரெட்

சென்னையிலிருந்து 50 கி.மீ. தூரத்தைச் சுற்றிய பகுதிகளில் பல மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென்–மேற்கு திசையில் நகர்ந்து சாதாரண தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் அதிக கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட்

அதிக மழை எச்சரிக்கையை தொடர்ந்து நான்கு மாவட்டங்களிலுமுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!